ஆஸ்பத்திரியில் நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழப்பு; பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

தனியார் ஆஸ்பத்திரியில் நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருவள்ளூர் கோர்ட்டு தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.;

Update: 2023-09-27 07:34 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் காமேஷ். இவரது மனைவி திவ்யா (வயது 30) கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார்ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக திவ்யாவை உறவினர்கள் அங்கு சேர்ந்தனர். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து டாக்டர்கள் இல்லாமலேயே அந்த ஆஸ்பத்திரியில் உள்ள நர்சுகள் திவ்யாவிற்கு பிரசவம் பாத்தனர். இதில் திவ்யாவிற்கு பிறந்த குழந்தை இறந்தது. இந்நிலையில் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாமலேயே நர்சுகள் பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்ததாக திவ்யாவின் கணவர் காமேஷ் ஊத்துக்கோட்டை போலீசில் நர்சுகள் உள்பட 5 பேர் மீது புகார் அளித்தார்.

மேலும் அந்த தனியார் ஆஸ்பத்திரி மீது காமேஷ் திருவள்ளூர் நுகர்வோர் கோர்ட்டில் இழப்பீடு வேண்டி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் லதா மகேஸ்வரி பாதிக்கப்பட்டவருக்கு 6 வாரத்திற்குள் இழப்பீடாக ரூ.5 லட்சம் தர வேண்டும் எனவும்

மேலும் ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வசூலிக்கப்பட்ட ரூ.15 ஆயிரம் மற்றும் வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 6 வாரத்திற்குள் அந்த தொகையை தர மறுக்கும் பட்சத்தில் மேலும் 9 சதவீதம் வட்டியுடன் அவர்களுக்கு இழப்பீடு தொகை அளிக்க வேண்டும் என திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற தலைவி லதா மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்