அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம்
இருதுக்கோட்டை அருகே அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை இருதுக்கோட்டை அருகே உள்ள மேலகிரி அய்யப்பன் கோவிலில் 32-ம் ஆண்டு மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜை, நவகிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் அய்யப்பனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் நடந்தது. நேற்று அய்யப்பனுக்கு மங்களாரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.