ஆயுர்வேத மருத்துவ முகாம்
பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் பந்தலூர், கூடலூர் வட்டக்கிளை சார்பில், இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் நடேசன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர், வட்டக்கிளை தலைவர் ரமேஷ், செயலாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுல்தான்பத்தேரி ஆயுர்வேத டாக்டர்கள் காய்ச்சல், இதய நோய், மூச்சுத்திணறல், கால் புண் மற்றும் நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் கர்ணன், மாரிமுத்து, அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.