தொழிற்சாலைகள், அலுவலகங்களில் வண்ண தோரணங்கள் கட்டி ஈரோட்டில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

தொழிற்சாலைகள், அலுவலகங்களில் வண்ண தோரணங்கள் கட்டி ஈரோட்டில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

Update: 2023-10-24 21:37 GMT

தொழிற்சாலைகள், அலுவலகங்களில் வண்ண தோரணங்கள் கட்டி ஈரோட்டில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

ஆயுதபூஜை

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்கள் கடந்த 2 நாட்கள் கொண்டாடப்பட்டன. ஆயுதபூஜைக்கு அரசு விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்களில் ஒரு நாளுக்கு முன்னதாகவே பூஜை கொண்டாடப்பட்டது.

நேற்று முன்தினம் காலையில் சில நிறுவனங்களில் பூஜை போடப்பட்டது. பெரும்பாலான நிறுவனங்கள், மெக்கானிக் பட்டறைகள், தொழிற்சாலைகளில் நேற்று முன்தினம் மாலையில் பூஜை செய்யப்பட்டது. நேற்று சரஸ்வதி பூஜை வழிபாடுகள் நடந்தது. வீடுகளிலும் பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

தோரணங்கள்

ஆயுதபூஜையை முன்னிட்டு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் வீடுகள் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. வண்ண தோரணங்கள் தொங்கவிட்டும், மாவிலை தோரணங்கள் கட்டியும் பூஜை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வாழைக்கன்றுகள், கரும்பு ஆகியவையும் கட்டப்பட்டன.

டிராக்டர்கள், பொக்லைன் எந்திரங்கள், லாரி, வாடகை கார்கள் என்று அனைத்து வகை வாகனங்களும் அலங்காரம் செய்யப்பட்டு, சந்தனம் பூசி பூஜை செய்யப்பட்டது. டிரைவர்கள் தங்கள் வாகனங்களுக்கு பயபக்தியுடன் தீபாராதனை காட்டி திருநீறு, குங்குமம் வைத்து வழிபாடு செய்தனர். கடந்த 2 நாட்களும் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்