ஆயக்காரன்புலம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு

வாய்மேடு அருகே ஆயக்காரன்புலம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு

Update: 2023-05-25 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேடு அருகே ஆயக்காரன்புலத்தில் கருங்கன்னி அம்பிகா சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கையொட்டி கடந்த 19-ந் தேதி அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பூர்வாங்க பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 21-ந் தேதி முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதையடுத்து நேற்று முன்தினம் காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்து மகாபூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கோவிலின் பிரதான கோபுரங்கள் உட்பட பரிவார தேவதைகளின் கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் அம்பாள் மற்றும் கைலாசநாதருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் கைலாசநாதன், திருப்பணி குழு தலைவர் ராதாகிருஷ்ணன், இந்தோனேசியா தொழிலதிபர் திராவிடமணி மற்றும் உபயதாரர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்