சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்

கட்டிமேடு ஊராட்சியில் கழிவறை தினத்தையொட்டி சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

Update: 2022-11-19 18:45 GMT

திருத்துறைப்பூண்டி;

கட்டிமேடு ஊராட்சியில் உலக கழிவறை தினத்தையொட்டி சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊா்வலத்துக்கு ஊராட்சி தலைவர் மாலினிரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஒன்றியக் குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி, சமூக ஆர்வலர்கள், ஞானசேகரன், கல்வி மேலாண்மைக் குழு உறுப்பினரும் கல்வியாளருமான ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சிவக்குமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். .முன்னதாக முழு சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் தூய்மைக் காவலர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் பதாகைகளை ஏந்தி ஊராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு கடைத்தெரு, பள்ளிவாசல் தெரு, சாலைத் தெருவழியாக சென்றனர். ஊர்வலத்தில் துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலாளர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் எ.பி.எம். செல்வம், ரகமத்துல்லா மற்றும் தலைமை ஆசிரியர் பாலு, ஆசிரியர்கள் சந்திரசேகரன், ராஜேஷ்குட்டி, அய்யப்பன், ராஜா, முத்துப்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்