குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-07-31 18:23 GMT

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல்துறை, குழந்தைகள் மற்றும் மனித கடத்தல் தடுப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் தேரடி மாதா கோவில், சின்னக்கடை தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் மாணவிகள் கலந்து கொண்டு, குழந்தைகள் மற்றும் மனித கடத்தல் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். மேலும் குழந்தைகள் சம்பந்தமான பிரச்சினைக்கு 1098, பெண்கள் சம்பந்தமான பிரச்சினைக்கு 181, சைபர் கிரைம் 1930, அவசர கால காவல் உதவி எண் 100 ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்