தொழிற்சாலை பாதுகாப்பு துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி

தொழிற்சாலை பாதுகாப்பு துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது

Update: 2023-06-14 21:12 GMT


மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடந்தது. இந்த பயிற்சிக்கு மதுரை மண்டல கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பயிற்சி வகுப்பில், கொத்தடிமை தொழிலாளர், வடமாநில தொழிலாளர்கள், குழந்தை தொழிலாளர் அதிகம் பணியாற்ற வாய்ப்புள்ள தொழிற்சாலை நிர்வாகத்தினர், கட்டுமான பணி ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, சிறுவர்களுக்கான நீதிச்சட்டம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு சட்டங்கள், வெளிமாநில தொழிலாளர் சட்டம் ஆகியன குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மதுரை தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் வேலுமணி, விருதுநகர் தொழிற்சாலை பாதுகாப்பு துறை இணை இயக்குனர் வேல்முருகன், விருதுநகர் தொழிலாளர் துணை உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி, மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலை, செங்கல்சூளை மற்றும் இதர தொழிற்சாலை நிர்வாகத்தினரின் பிரதிநிதிகள், கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை மதுரை மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்