மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
வாணாபுரத்தில் மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வாணாபுரம்
வாணாபுரத்தில் மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வாணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சுகாதார நிலையம் சார்பில் மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் குடும்பம் நலம் காப்பது குறித்தும் பெண் குழந்தையை பாதுகாத்தல், அளவுக்கு அதிகமான குழந்தைகளை பெற்றெடுப்பதை தவிர்த்தல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக சென்றனர்.
இதில் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் வாணாபுரம் அரசு சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.