உலக சைக்கிள் தினத்தையொட்டி உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி
திருத்தணி அரசு ஆஸ்பத்திரி சார்பில் உலக சைக்கிள் தினத்தையொட்டி உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
உலக சைக்கிள் தினத்தையொட்டி திருத்தணி அரசு ஆஸ்பத்திரி சார்பில் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தினந்தோறும் சைக்கிள் ஓட்டுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதோடு, இதய அடைப்பு, உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்துதல், ஆயுள் காலம் அதிகரிப்பு உள்ளிட்ட உடல் நலன் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குனர் இளங்கோ, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தனர்.