போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தனுஷ்கோடி அரிச்சல்முனை மற்றும் பாம்பன் பகுதியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-06-28 00:15 IST

ராமேசுவரம், 

தனுஷ்கோடி அரிச்சல்முனை மற்றும் பாம்பன் பகுதியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

போதைப்பொருள் தடுப்பு

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை கூடுதல் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் ஜெய்லானி, கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், முத்து கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் ஏராளமான மீனவர்களும், கடலோர போலீசாரும் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்களிடமும் போதை பொருள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதைப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியதுடன் போலீசார் விழிப்புணர்வு பேரணியும் தனுஷ்கோடியில் இருந்து ராமேசுவரம் வரை நடத்தினார்கள்.

பாம்பன்

இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின் பேரில் பாம்பன் தெற்கு வாடி கடற்கரை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பாம்பன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் காளிதாஸ் உள்ளிட்ட போலீசார் கடற்கரையில் மீனவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு குறித்த துண்டு பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்