ஈரகழிவில் உரம் தயாரித்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரகழிவில் உரம் தயாரித்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-25 15:29 GMT

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு ஈரகழிவுகள் மூலம் உரம் தயாரித்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நுண்ணுயிர் உரஉற்பத்தி மையம் வளாகத்தில் நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் கவிதாபாண்டியன் கலந்துகொண்டு உற்பத்தி மையம் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பேசினார். இதில் நகராட்சி என்ஜினீயர் பிரதான்பாபு, நகர்மன்ற உறுப்பினர் தேவி சிராளன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மணிகண்டன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்