பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-30 19:00 GMT

மன்னார்குடி அருகே சேரன்குளத்தில் உள்ள ஆள்காட்டியம்மன் கோவில் வளாகத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஷோபா கணேசன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சேரன்குளம் அரசு பள்ளி மாணவர், மாணவிகளின் சிலம்பம், வாள்வீச்சு, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்