சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி;

Update:2022-11-23 00:15 IST


சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹம்ஜித்உசேன், சந்தியாகு, இளங்கோ, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம், குழந்தைகளை தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்ப்பது, பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி அல்லது சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்பொழுது மர்ம நபர்கள் யாரேனும் பின் தொடர்ந்தால் உடனே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவேண்டும், தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. பின்னர் பேச்சு, தனித்திறன், நாடகம், கட்டுரை ஆகிய போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்