பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் கால விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் கால விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-10 19:00 GMT

நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளை குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் கால விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நன்னிலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்கள் பேரிடர் காலத்தில் முதலுதவி எவ்வாறு செய்ய வேண்டும்? பாம்பு, தேள் கடித்தால் முதலுதவி செய்வது எப்படி? ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது பற்றி பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்