விழிப்புணர்வு நிகழ்ச்சி

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-10-01 18:45 GMT

சீர்காழி போக்குவரத்து போலீஸ்துறை சார்பில் நகரில் உள்ள அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சீர்காழி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிறைச்சந்திரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்்டர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசுகையில், ஆட்டோ டிரைவர்கள் பணியின்போது சீருடை அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும். மதுஅருந்திவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ வாகனங்களை இயக்ககூடாது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றிசெல்லவேண்டும். நகரில் ஒரு வழிப்பாதையை கட்டாயம் பின்பற்றி, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து ஆட்டோக்களை இயக்கவேண்டும் என்றார். இதில் 70-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து ஆட்டோ டிைரவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்