அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

நெமிலி வட்டாரத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-04-25 18:16 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டாரத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நான்கு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக நேற்று நெமிலி பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் மீனாட்சி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் அரசு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு ஊர்வலத்தின்போது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம், எதிர்காலத்தை வளமாக்குவோம் என்று கோஷமிட்டு சென்றனர். தொடர்ந்து அரசு பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. மேலும் அரசு பள்ளிகளில் பல்வேறு சலுகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து பெற்றோர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் ஆசிரிய பயிற்றுனர்கள் ஜெயபிரகாசம், கார்த்திகேயன், கோவிந்தராஜி, தலைமை ஆசிரியர் சுந்தரம்பாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவரஞ்சனி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்