குழந்தைகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

விளாப்பாக்கம் பேரூராட்சியில் குழந்தைகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;

Update:2023-10-21 20:25 IST

திமிரி

திமிரி அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து பேரூராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் முத்து வரவேற்றார்.

கூட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வி.நிஷா, பேரூராட்சி உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், கிராம சுகாதார செவிலியர்கள், காவல் துறையினர் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்