குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

ஒடுகத்தூர் அரசு ஆண்கள் பள்ளியில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-16 13:59 GMT


ஒடுகத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆல் தி சில்ரன் அமைப்பின் சார்பாக குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் பிச்சை தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்று பேசினார்.

மாவட்ட குழந்தைகள் நல அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், குழந்தைகள் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுடைய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் படி பேசினார். மேலும் அவர், சுகாதாரம் குறித்தும் பேசினார். நிகழ்ச்சியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர். முடிவில் ஆசிரியர் காத்தவராயன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்