மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
வாணியம்பாடியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;
வாணியம்பாடி
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் 'இமைகள் திட்டம்' மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வாணியம்பாடி நியூடவுனின் உள்ள நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும்,
பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி, குழந்தை திருமணம் குறித்தும் மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து அவர் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.