ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது;
அரக்கோணம்
ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
அரக்கோணம் டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல் (தாலுகா) , பாரதி (டவுன்), சப்- இன்ஸ்பெக்டர்கள் நாராயணசாமி, ரகு ஆகியோர் ஆட்டோ டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.
அப்போது ஆட்டோ டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆட்டோ ஓட்டினாலோ, அதிகப்படியான ஆட்களை ஏற்றி சென்றாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வேண்டும். சந்தேகப்படும்படியான பொருட்களை கொண்டு சென்றாலோ, சந்தேகப்படும்படியான மர்ம நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றனர்.
மேலும் சாலை விபத்துகளில் சிக்கியவரை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அரசு அறிவிப்பையும் தெரிவித்தனர்.