5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி

போதை, குழந்தைகள் வன்கொடுமை தடுப்பை வலியுறுத்தி 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.

Update: 2023-03-11 17:34 GMT

போதை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு சாதனை மனித சங்கிலி நிகழ்ச்சி, சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் இன்று நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கி மனித சங்கிலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, போதை பொருட்களின் தீமைகள் மற்றும் சமூக, குடும்ப பாதிப்புகள் குறித்து பேசினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டு சாதனை மனித சங்கிலியாக பள்ளி வளாகத்தில் நின்று, போதை பொருள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு உறுதிமொழி எடுத்தனர்.

நிகழ்ச்சியில், அலமா அபாகஸ் தமிழ்நாடு இயக்குனர் வினோத் கண்ணன், தமிழ்நாடு மற்றும் கேரளா லீட் இயக்குனர் பிரசாந்த், 20-வது வார்டு ரீகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பள்ளியின் முதல்வர் லில்லி கிரேஸ் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சபினா மேரி வஹிதா மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்