பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

வள்ளியூரில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-08-24 19:00 GMT

வள்ளியூர்:

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு சாதி ஒழிப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டம், போதைப் பொருட்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, வள்ளியூர் வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் குழந்தைகள் நல அலுவலர் ஹெலினா ஆகியோர் இணைந்து வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வள்ளியூர் கான்கார்டியா மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளிடம் புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு பற்றியும், பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், மாணவர்கள் சாதி ரீதியான உணர்வை தூண்டும் வகையிலான கயிறுகளை பள்ளிக்கு அணிந்து வரக்கூடாது என்று சாதி ஒழிப்பு பற்றியும், வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையுடன் இருப்பது பற்றியும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளின் முக்கியத்துவம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்