வேளாண்மை மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

மூக்கனூரில் வேளாண்மை மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Update: 2023-02-26 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தில் அட்மா திட்டம் மூலம் வேளாண்மை துறையின் மானியதிட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சாந்தா அர்ஜுனன், விவசாய சங்க தலைவர் அப்பு, பொருளாளர் சிவக்குமார், ஊராட்சி மன்ற முன்னாள் துணைதலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் மவிசுதா வரவேற்றார். கலை நிகழ்ச்சியில் உழவன் செயலியின் பயன்பாடுகள், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டங்கள், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்கள், அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு கலை நிகழ்ச்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், லோகபிரியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்