சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கரூர் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைப்பயணம் நடைபெற்றது. கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த கலைப்பயணத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெய முருகன் கலந்துகொண்டு பயணத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் விஜேந்திரன் மற்றும் வனவர் பாஸ்கர், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சின்ன தாதம்பாளையம் பகுதியில் உள்ள வன விரிவாக்க கோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வளர்ப்பதின் முக்கியத்துவத்தையும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கடவூர் இசைவா போரில் அமைந்துள்ள இயற்கை மூலிகை மருந்துகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பிறகு நம்மாழ்வார் வாழ்விடம் மற்றும் பொன்னணியாறு அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாணவ-மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். இதில் 60-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.