கூடலூர் பகுதியில் கஞ்சா விற்பனை தடுப்பு விழிப்புணர்வு

கூடலூர் பகுதியில் கஞ்சா விற்பனை தடுப்பு விழிப்புணர்வு

Update: 2023-05-08 18:45 GMT

கூடலூர்

தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி கஞ்சா வேட்டை 4.0 விழிப்புணர்வு முகாம்கள் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் கூடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மேற்பார்வையில் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உதயகுமாரி மற்றும் தலைமை காவலர் ஜெயக்குமார், முதல் நிலை காவலர் விஸ்வ பிரதீப், காவலர் பரணி ஆகியோரை கொண்ட குழுவினரால் கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உள்பட்ட மண்வயல் பகுதியில் கஞ்சா வேட்டை 4.0 விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு கஞ்சாவினால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி கஞ்சா உபயோகிப்பவரை அதிலிருந்து காப்பாற்றி மீட்டு மறுவாழ்வு கொடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது இதில் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட மண்வயலை சார்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்