பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
கீழப்பாவூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை தாங்கினார். 'எனது நகரம், எனது பெருமை, எனது நகரத்தை சுத்தமாக வைத்திருப்பது எனது கடமை' என்ற தலைப்பில், ஏ.வி. உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்தும், பிளாஸ்டிக் பையை ஒழித்து துணிப்பையை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, துணைத்தலைவர் ராஜசேகர் மற்றும் உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.