நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை குறித்து விழிப்புணர்வு
ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜோலார்பேட்டை நகராட்சியில் போகிப் பண்டிகையை புகையில்லா பண்டிகையாக கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மா.காவியா விக்டர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார் தாசன் வரவேற்றார்.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மா.காவியா விக்டர் பேசும்போது தமிழக அரசு புகையில்லா போகி கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம. அன்பழகன், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.