விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.;
வலங்கைமானில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. அப்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சியில் குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது என தீயணைப்பு வீரர்கள் அறிவுறுத்தினர்.