பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது: முதல்-அமைச்சர் வழங்கினார்
சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அதன் விபரம் வருமாறு;
* சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருதை முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
* தமிழகத்திற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் தகைசால் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் விருது மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. விருதினை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அத்துடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
* நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
* சிறந்த பணிக்கான முதல்-அமைச்சர் விருது, முதல்-அமைச்சரின் முகவரித் துறையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி வனிதா, பொது நூலகங்கள் இயக்குனர் இளம்பகவத் ஐ ஏ எஸ், சுகாதாரத் துறையைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி ஐ ஏ எஸ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஐ ஏ எஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உதவியதற்காக செங்கல்பட்டு விஜயலட்சுமி, சென்னை ஜெயலட்சுமி, சூசை அந்தோணி, தூத்துக்குடி சந்தானம், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியைச் சேர்ந்த சிவமலர் ஆகியோர் விருது வழங்கப்பட்டது.
* பெண்கள் நலனுக்காக சிறந்த சேவைகளைச் செய்ததற்காக சென்னை மீனா சுப்ரமணியன், மதுரை ஐஸ்வரியம் அறக்கட்டளை பாலகுருசாமி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
* ஈரோடு கதிரவன், கன்னியாகுமரி ஜோசன் ரெகோபர்ட், கடலூர் ஜெயராஜ், நிகிதா, புதுக்கோட்டை கவின் பாரதி, விருதுநகர் உமாதேவி, ராமநாதபுரம் ஆயிஷா பர்வீன் ஆகியோருக்கு முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டது.