விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம்

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம் நடந்தது.

Update: 2022-09-06 18:35 GMT

சிவகங்கையை அடுத்த நாமனூர், கீழப்பங்குடி, திருமலை, சுண்ணாம்பு காளவாசல், சாஸ்திரி தெரு, சக்கந்தி, மேலவாணியங்குடி, வீழநெறி சாலூர், மலம்பட்டி, இடையமேலூர் ஆகிய கிராமங்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக சிவகங்கை தாலுகா அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணியம்மா முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தண்டியப்பன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் முத்து கருப்பன், ஒன்றிய செயலாளர் உலகநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், தர்மராஜ், தனசேகரன், பஞ்சவர்ணம், தேன்மொழி, பாப்பா, பார்வதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் வீரபாண்டி, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து சிவகங்கை தாசில்தார் தங்கமணி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்