ஆவின் பால் விற்பனை நிலையம் அமைச்சர் கயல்விழி திறந்துவைத்தார்

தாராபுரம் வடதாரை பகுதியில் ஆவின் பால் விற்பனை நிலையத்தை அமைச்சர் கயல்விழி திறந்துவைத்தார்,

Update: 2023-07-15 19:03 GMT

தாராபுரத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் ரூ.3 லட்சத்தில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையத்தை ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து ைவத்து பேசுகையில் "தாராபுரம் வடக்கு பகுதியில் அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு தனியார் பால் நிறுவனங்களை விட குறைந்த விலையில் பால் மற்றும் பால் பொருட்கள் கலப்படம் இல்லாமல் சுத்தமான முறையில் கிடைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில் அதிக மக்கள் வசிக்கும் வடக்கு பகுதியில் பொதுமக்களுக்கு தரமான பால் கிடைக்க ஆவின் பால் நிலையம் தொடங்கப்பட்டது"என்றார். இதையடுத்து அமைச்சர் அலுவலகத்தில் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மேலாண்மை இயக்குனர் கனகராஜ், தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர் ஜெயராமமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகர், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வராஜ், தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர அவைத்தலைவர் கதிரவன், நகர செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவசெல்வன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் ஹைடெக் அன்பழகன், ஆனந்தி, மாவட்ட பிரதிநிதி பைக் செந்தில்குமார், அய்யப்பன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் அருக்காணி, நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்