ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் பலி

விக்கிரவாண்டி அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் பலி

Update: 2023-07-10 18:45 GMT

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் கிராமம் குளக்கரைதெருவை சேர்ந்தவர் அருள்குமார்(வயது 45). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வரும் இவர் சம்பவத்தன்று இரவு பேரணி கிராமத்தில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். பேரணி கூட்டுரோடு அருகே சாலையை கடந்த பொழுது சித்திரையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அருள்குமார் ஓட்டிச்சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செஞ்சியை சேர்ந்த பச்சமுத்து(20), சதீஷ்குமார்(23) ஆகிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அருள்குமார் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்