ஆட்டோ கவிழ்ந்து 10 பெண் தொழிலாளர்கள் காயம்

தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 10 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.;

Update:2022-06-21 19:00 IST

தூசி

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா, தூசி அருகே உள்ள நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சொந்தமான ஆட்டோவில் அதே கிராமத்தை சேர்ந்த சிப்காட் பெண் தொழிலாளர்கள் வேதா (வயது 27), ரம்யா (26), வினோதினி (39), தனலட்சுமி (32), மோகனா (22), பரமேஸ்வரி (24), நித்தியா (22), விமலா (40), மணிமேகலை (29), ரேவதி (32) ஆகியோர் செய்யாறு சிப்காட் கம்பெனிக்கு சென்றனர். ஆட்டோவை வெங்கடேசன் ஓட்டிச்சென்றார்.

காஞ்சீபுரம்-வந்தவாசி சாலை மாங்கால் பெட்ரோல் பங்க் அருகில் முன்னால் சென்ற ஆட்டோவை வெங்கடேசன் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வாகனம் வந்துள்ளது. இதனால் அவர் பிரேக் போட்டுள்ளார். இதில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த 10 பெண்கள் மற்றும் டிவைவர் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்