லோடு ஆட்டோ மோதி முதியவர் பலி

லோடு ஆட்டோ மோதி முதியவர் உயிரிழந்தார்

Update: 2022-06-11 22:34 GMT

நெல்லை:

நெல்லை வி.எம்.சத்திரம் தொலைத்தொடர்பு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 82). இவர் நேற்று முன்தினம் மாலையில் பாளையங்கோட்டையில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பி.எஸ்.என்.எல். குடியிருப்பு அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.


இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்