ஆடி கடைசி வெள்ளி; சங்கரன்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-08-12 15:55 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா, சித்திரை பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதேசி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இந்த கோவிலில் நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சங்கரன்கோவில், ராஜபாளையம், நெல்லை, கோவில்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர். சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்பாள் ஆகிய மூன்று சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்