1-ந்தேதி முதல் இ-நாம் முறையில் மறைமுக ஏலம்
1-ந்தேதி முதல் இ-நாம் முறையில் மறைமுக ஏலம்;
சேவூர்
சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் 30 பேர் 210 மூட்டைகள் நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வந்தார்கள். ஏலத்தில் 7 வியாபாரிகள் கலந்து கொண்டார்கள். இந்த ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.7,200, அதிகபட்சம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,600 வரை ஏலம் நடைபெற்றது. இதுகுறித்து விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரமோகன் கூறியதாவது:- நிலக்கடலை விதைப்பு சீசன் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மத்தியில் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்று வட்டார விவசாயிகள் அதிக அளவில் தங்களது விளை பொருளான நிலக்கடலையை எடுத்து வந்து பயன்பெறலாம். வருகிற 1-ந் தேதியில் இருந்து இ-நாம் முறையில் மறைமுக ஏலம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் தொகை அவர் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதனால் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
----