அதிமுகவை அழிக்க நினைத்தவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது - ஓபிஎஸ்

அதிமுகவை அழிக்க நினைத்தவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது என்று ஓ பன்னீர் செல்வம் பேசினார்.

Update: 2022-08-28 11:20 GMT

தேனி,

என் பக்கம் தொண்டர்கள் உள்ளார்கள்: எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டர்கள் உள்ளார்கள் என்று ஓ பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தேனியில் உள்ள பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், முதல் அமைச்சராகவோ, கட்சித்தலைவராகவோ ஆசைப்படவில்லை, அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எனது ஆசை.

எம்.ஜி. ஆர், ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் ஒன்றாக பயணிக்க வேண்டும். ரவுடிகளையும் குண்டர்களையும் வைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தியது. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே இயக்கம் அதிமுகதான். அதிமுகவை அழிக்க நினைத்தவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்