வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி; 5 ேபர் கைது
கடையநல்லூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கடையநல்லூர்:
கடையநல்லூர் வனச்சரகம் சின்னக்காடு பீட்டிற்கு உட்பட்ட மங்களாபுரம் பரம்பு பகுதியில் வன விலங்குகளை வேட்டை நாய்கள் வைத்து சிலர் வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் பிரிவு வனவர் முருகேசன், மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன் மற்றும் வனத்துறையினர் காசிதர்மம் மற்றும் மங்களாபுரம் பரம்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னக்காடு பீட் எல்லைக்கு உட்பட்ட மங்களாபுரம் பரம்பு பகுதியில் காசிதர்மத்தைச் சேர்ந்த லட்சுமணகுமார் (வயது 31), பழனிச்சாமி (40), மாடசாமி (62), செல்லத்துரை (55), திருமலைகுமார் (42) ஆகியோர் வேட்டை நாய்களுடன் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து 5 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.