சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி - வி.சி.க. நிர்வாகி, சிறுமியின் தாய் போக்சோவில் கைது

தகாத உறவு காதலனுடன் சேர்ந்து, தாய் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-03 09:30 GMT

தென்காசி,

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் இசக்கிமுத்து. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இவர், சங்கரன் கோவிலை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அப்பெண்ணின் மகளான இளம் சிறுமிக்கு இசக்கி முத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், சிறுமியின் தாய் உதவியுடனே அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய் மற்றும் அவரின் தகாத உறவு காதலனின் சித்ரவதைகளுக்கு ஆளாகி தவித்து வந்த சிறுமி, தன் உறவினர்கள் மூலம் போலீசில் புகாரளித்துள்ளார். இந்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், சிறுமியின் தாய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இசக்கி முத்து ஆகியோர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்