தனியார் நிறுவன மேற்பார்வையாளரை தாக்கியவர் கைது

தனியார் நிறுவன மேற்பார்வையாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-07 19:30 GMT

ஓசூர்:-

ஓசூர் மூக்கண்டப்பள்ளி அரசனட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 31). தனியார் நிறுவன மேற்பார்வையாளர். இவர், கடந்த 6-ந் தேதி மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த பசுபதி (21) என்பவர் மோட்டார்சைக்கிளில் வேகமாக அங்கு வந்து நிறுத்தினார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளையராஜா எதற்காக இங்கு வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்துகிறாய்? என கேட்டார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் பசுபதி இளையராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து இளையராஜா கொடுத்த புகரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்