ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்

பழனி அருகே ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-10 19:00 GMT


பழனி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மனைவி முருகாயி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் சுப்பிரமணி அய்யம்பாளையம் ஊராட்சி தலைவராக உள்ளார். கடந்த 5-ந்தேதி இரவு 11 மணிக்கு 5 பேர் சேர்ந்து எனது கணவரை தாக்கினர். அதில் காயமடைந்த எனது கணவரை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம்.


மேலும் இதுபற்றி பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். ஆனால் 3 பேரை இதுவரை கைது செய்யவில்லை. இதற்கிடையே அவர்களின் உறவினர்கள் எங்களை அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.




Tags:    

மேலும் செய்திகள்