செய்தியாளர் மீது தாக்குதல்: உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்ய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்

Update: 2024-01-25 11:33 GMT

சென்னை,

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நியூஸ்-7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் சகோதரர் நேசபிரபு அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவிப்பதோடு, கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்   என தெரிவித்துள்ளார் 

Tags:    

மேலும் செய்திகள்