பனமரத்துப்பட்டி:-
பனமரத்துப்பட்டியில் பேத்தியை கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட பாட்டி மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேலி, கிண்டல்
பனமரத்துப்பட்டி பேரூராட்சி ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள். இவருடைய பேத்தி மஞ்சு (வயது 25). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். திருமணமான மஞ்சு கணவரை பிரிந்து பாட்டியுடன் வசித்து வருகிறார். மஞ்சுவின் வீடு அருகே சென்ற 3 பேர் அவரை கேலி, கிண்டல் செய்து தொல்லை கொடுத்துள்ளனர்.
இதை கண்ட ரங்கம்மாள் அவர்களை தட்டி கேட்டுள்ளார். அந்த வாலிபர்கள் ரங்கம்மாளை கல்லால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பனமரத்துப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில், காளியாகோவில் புதூரை சேர்ந்த வரதராஜ் (35), ஸ்ரீதரன் (21), கோகுல் (22) ஆகிய 3 பேர், மஞ்சுவை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.