தந்தை, மகள் மீது தாக்குதல்

சங்கராபுரம் அருகே தந்தை, மகள் மீது தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-28 17:28 GMT

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள மஞ்சபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானகுமார் மனைவி சந்தியா(வயது 25). இவர் வீட்டின் அருகில் நடந்து சென்றபோது முன்விரோதம் காரணமாக அதே ஊரை சேர்ந்த அய்யாசாமி மகன் முனுசாமி(வயது 46) என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தியாவிடம் இருந்த செல்போன், ரூ.6 ஆயிரத்து 500, 2 பவுன் நகையை பறித்துச்சென்றார்.

உடனே சந்தியா, தனது தந்தை வெங்கடேசனுடன் சென்று நகை, பணம் பறித்துச்சென்றது குறித்து முனுசாமியிடம் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த முனுசாமி, ஆதரவாளர்களுடன் சேர்ந்து சந்தியாவையும், வெங்கடேசனையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் முனுசாமி, இவரது ஆதரவாளர்களான சங்கர், பன்னீர், ஏழுமலை, மணிகண்டன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்