பாலக்கோடு
மகேந்திரமங்கலம் அருகே உள்ள வேப்பிலை அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜன் (வயது 48). விவசாயி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கேசவன் (70), ரஞ்சித்குமார் (42) ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கேசவன், ரஞ்சித்குமார் ஆகியோர் பசவராஜிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்டினர். இதனை பசவராஜ், அவருடைய மனைவி மற்றும் மகள் தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கேசவன், ரஞ்சித்குமார் சேர்ந்து 3 பேரையும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கேசவன் மற்றும் ரஞ்சித்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.