டிரைவர், கண்டக்டர் மீது திருநங்கைகள் தாக்குதல்

ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் டிரைவர், கண்டக்டர் மீது திருநங்கைகள் தாக்குதல் நடத்தினர். பஸ்சை நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-04 19:58 GMT

ஆத்தூர்

ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் டிரைவர், கண்டக்டர் மீது திருநங்கைகள் தாக்குதல் நடத்தினர். பஸ்சை நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக கள்ளக்குறிச்சி செல்ல ஒரு அரசு பஸ் ஆத்தூர் புதிய பஸ் நிலையத்திற்கு நேற்று இரவு 10.30 மணிக்கு வந்தது. பஸ்சை ஆத்தூர் அருகே ஆைனயம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் ஓட்டி வந்தார். கண்டக்டர் கமலக்கண்ணன் பணியில் இருந்தார்.

கண்டக்டர் கமலக்கண்ணனுக்கும், அங்கிருந்த திருநங்கைகளுக்கு திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், கண்டக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர், ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே இதனை தட்டிக்கேட்ட டிரைவர் ரமேசும் தாக்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போராட்டம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து பஸ் டிரைவர்கள் நள்ளிரவில் பஸ்களை இயக்காமல் போராட்டம் நடத்தினர். இதனால் ஆத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்