கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.;

Update:2022-08-25 22:05 IST

கடலூர், 

கடலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, உடற்கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கடலூர் குறுவட்டத்தை சேர்ந்த 53 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கூடைப்பந்து விளையாட்டு வீரர் தங்கதுரை, புரோ கபடி விளையாட்டு வீரர் ஜவகர், உடற்கல்வி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், உடற்கல்வி ஆசிரியை நிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டி வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்