பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி நடந்து வருகிறது. இதில் 800 பேர் கலந்துகொண்டனர்.

Update: 2023-10-05 21:04 GMT

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், நெல்லை வருவாய் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான தடகள போட்டி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் என 3 பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள்ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினார்கள். 2 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த போட்டியை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, மாநகராட்சி துணை மேயர் ராஜூ உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்