திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் விற்பனை மேம்பாட்டு மேலாண்மை மன்ற கூட்டம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் விற்பனை மேம்பாட்டு மேலாண்மை மன்ற கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகநிர்வாகவியல் துறை சார்பாக மேலாண்மை மன்ற கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் த.ரேணுகா முன்னிலை வகித்தார். வணிக நிர்வாகவியல்துறை 3-ம் ஆண்டு மாணவி ந.நர்மதா வரவேற்று பேசினார். தமிழ்நாடு சிமெண்டு கார்ப்பரேசன் லிமிடெட்டின் மாவட்ட விற்பனை மேலாளர் சா.சேர்மசாந்தி கலந்து கொண்டு, விற்பனை மேம்பாட்டு மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும், அவர், விற்பனையை எவ்வாறு மேம்படுத்துவது? விற்பனை மேலாண்மையில் சிறந்து விளங்குவது எப்படி? என்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். கூட்டத்தில் வணிகநிர்வாகவியல்துறை பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். 2-ம் ஆண்டு மாணவி செ.அகிநயபிரியா நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை மேலாண்மை மன்ற செயலாளர் பேராசிரியை ரா.தெயவவீரலட்சுமி செய்து இருந்தார்.
இதேபோன்று, திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் பேரவை கூட்டம் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி வழிகாட்டுதல்படி நடந்தது. 3-ம் ஆண்டு மாணவி பா.ராமலட்சுமி வரவேற்று பேசினார். காயல்பட்டிணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியை ஜெ.கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பிளாக் செயின் மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் பேசினார். கணினி அறிவியல் துறை பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறைத்தலைவர் சு.செல்வநாயகி தலைமையில் உதவி பேராசிரியை ஜெ.பாரதி செய்து இருந்தார். மாணவி வெ.காந்த்ரியா நன்றி கூறினார். முதலாம் ஆண்டு மாணவி சோ.வி.ெசரின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.